சிரியாவுக்கு மேட்டிஸ் விடுத்த எச்சரிக்கை

சிரியாவுக்கு மேட்டிஸ் விடுத்த எச்சரிக்கை

1 mins read
2c2337c1-464f-43af-9fb8-5fb8f0ce45a5
-

வா‌ஷிங்டன்: சிரியாவின் கிழக்கு கூட்டாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவப் படை யினருக்கும் போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், விஷ வாயுவை ஆயுதமாகப் பயன்படுத்த வேண் டாம் என்று சிரியாவின் படை யினருக்கு அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையை சிரியா படையினர் அலட்சியப்படுத் தினால் அவர்களுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா அதன் ராணுவத்தை அனுப்புமா என்பது குறித்து அவர் கூறவில்லை. அண்மையில் சிரியா படையினர் விஷ வாயு பயன் படுத்தி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதை சிரியா நிராகரித்துள்ளது.

விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிரியா சிறுவர்கள். படம்: ஏஎஃப்பி