அன்வாரை நீக்கியது தவறான முடிவு: மகாதீர் ஒப்புதல்

அன்வாரை நீக்கியது தவறான முடிவு: மகாதீர் ஒப்புதல்

1 mins read
8b2bdbc6-8bad-4449-a0fa-136824d596fd
-

தமது அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப் ராகிம்மை தாம் பதவி நீக்கம் செய் திருக்கக்கூடாது என்று மலேசியா வின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார். புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் சின் சியூ டெய்லி செய்திக்கு சிறப்புப் பேட்டி அளித்த திரு மகாதீர், 92, அந்தக் காலகட்டத் தில் தாம் சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி இருக்கக்கூடாது என்றார். சட்டத்தை முழுமையாகப் பின் பற்றி தாம் தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் அன்வாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். "அரசியல் ரீதியாகப் பார்த்தால் நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. நான் பிரதமராக இருந்த போது மக்களுக்கு வெறுப்பூட்டும் எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது என்று எனக்கு நானே உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தேன்.

"அதனால், அன்வார் தொடர் பான அனைத்து ஆதாரங்களையும் போலிசார் சமர்ப்பித்தபோது எனக்கு வேறு வழி இல்லாமற்போனது," என் றார் திரு மகாதீர். இருந்தபோதிலும் சட்டப்படி விசா ரணை நடத்தப்பட்ட பின்னரே அன் வார் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் பலர் குறிப்பிடுவதுபோல தாம் ஒரு சர்வாதிகாரியாக இருந் திருந்தால் விசாரணை எதுவுமின்றி நேரடியாக அவரை சிறையில் தள்ளி இருக்கமுடியும் என்றும் அவர் தமது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.