அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை (படம்) அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று திடீரென்று பதவியில் இருந்து நீக்கினார். டில்லர்ச னுக்குப் பதில் உளவுத் துறை இயக்குநர் மைக் போம்பியோவை புதிய வெளியுறவு அமைச்சராக டிரம்ப் உடனடியாக நியமித்தார். வடகொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்கா தயாராகி வரும் நிலையில் டிரம்ப் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி கள் கூறினர். தாம் பதவி விலகக் கேட்டுக்கொள்ளப்படக்கூடும் என அறிந்த டில்லர்சன் தமது ஆப் பிரிக்கப் பயணத்தை பாதியி லேயே ரத்து செய்துவிட்டு நேற்று முன்தினம் வாஷிங்டன் திரும்பி னார். உளவுத்துறை இயக்குநராக அந்தத் துறையின் துணை இயக் குநர் ஜினா ஹேப்சல் நியமிக்கப் பட்டுள்ளார். அமெரிக்க உளவுத் துறைக்கு பெண் ஒருவர் தலை வராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை.
வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் நீக்கம்: டிரம்ப் அதிரடி
1 mins read
-

