சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் மற்றும் செலவுகள் ஆகியவை தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஆய்வு நடவடிக்கை இப்போது முதல் ஏப்ரல் மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், புக்கிட் தீமா, கிளமெண்டி, கேலாங், காலாங், மண்டாய், நொவினா, செம்பவாங், செங்காங், தெம்பனிஸ், தங்ளின், யீஷூன் ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் குடும்பங்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படும். குடும்பச் செலவுகள் ஆய்வில் சேகரிக்கப்படும் தகவல்கள் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டைத் தொகுப்ப தற்குப் பயன்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்தது. ஆய்வு நடத்தும் அதிகாரிகள் அனைவரும் அதற்குரிய அடையாள அட்டைகளை வைத் திருப்பார்கள்.
குடும்பச் செலவுகள் குறித்த ஆய்வு
1 mins read

