நேப்பாளத்தில் விமான ஓடுபாதையிலிருந்து விலகி ஓடி மோதிய விமானம்

நேப்பாளத்தில் விமான ஓடுபாதையிலிருந்து விலகி ஓடி மோதிய விமானம்

1 mins read

காட்மாண்டு: பங்ளாதேஷ் நாட்டுக் குச் சொந்தமான விமானம் விபத் துக்குள்ளான சம்பவத்தில் 49 பேர் இறந்துவிட்டனர். எஞ்சிய 22 பேர் தப்பிவிட்டனர். இந்த நிலையில் விமானத்தை இறக்குவதில் விமானிக்கு ஏற்பட்ட குழப்பமே விபத்துக்கான காரணம் என்று நம்பப்படுகிறது. ஓடுதளத்தை நெருங்கும் போது வடக்கு திசையில் இறக்கு வதா அல்லது தெற்கு திசையில் இறக்குவதா என்பதில் விமானிக்கு குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது.

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து புறப்பட்ட யுஎஸ்-பங்ளா ஏர்லைன்சின் விமானம் திங்கட் கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2.20 மணியளவில் நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலிருந்து விலகி ஓடிய விமானம் வேலியை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த காற்பந்து மைதானத்தில் மோதி நொறுங்கியது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமான நிலைய தீ அணைப்பாளர்கள் போராடி தீயை அணைத்தனர். அந்த விமானத்தில் 67 பயணிகளும் 4 விமான ஊழியர்களும் இருந்தனர். இதில் 20 பேர் மீட்கப்பட்டு காட்மாண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியி லேயே 7 பேர் இறந்தனர்.