பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்

1 mins read
0d1ba2b9-f0c1-456b-a984-078537593e38
-

பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், 76, லண்டன் கேம்பிரிட் ஜில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானதாக குடும்பத் தினர் அறிவித்தனர். விஞ்ஞானி ஹாக்கிங், அண்டம் பற்றி ஆராய்ந்தவர். ஈர்ப்பு விசை யின் இயற்கைத் தன்மை, இந்த அண்டம் உருவான கதை எல்லா வற்றையும் சக்கர நாற்காலியில் இருந்தபடி, எழுத, படிக்க, பேச முடியாத சூழலிலும் அலசியவர். கருந்துளைகள் (black holes) பற்றிய இவரின் விளக்கம் பலரை யும் ஈர்த்தது.

'ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' (A Brief History of Time) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி இமாலய சாதனைகளை படைத்தவர் இவர். 21 வது வயதில் அரிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஹாக்கிங், பல தடைகளைக் கடந்து மருத்துவர் கள் கூற்றைப் பொய்யாக்கி பல காலம் வாழ்ந்தவர். 'வாய்ஸ் சின்த்தசைஸர்' எனப்படும் பேச்சு முறையை உருவாக்கி அதன் மூலம் உரையாற்றி உலகம் முழுவதும் ஏராள மக்களை ஈர்த்தவர். இவரின் மூளையோடு ஒரு கணினியை இணைத்து இவர் பேச நினைப்பதை கணினித் திரையில் எழுத்து வடிவில் கொண்டுவருமாறு உருவாக்கப் பட்ட ஒரு கணினி நாற்காலியில் இருந்தபடி இவர் பேசவோ, எழுதவோ முடியாத நிலையிலும் தன் கருத்துகளை அதிகமாக வெளியிட்டு வந்தார்.

இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங். படம்: ராய்ட்டர்ஸ்