டில்லர்சன் நீக்கம் குறித்து உலக நாடுகள் கருத்து

டில்லர்சன் நீக்கம் குறித்து உலக நாடுகள் கருத்து

1 mins read

வா‌ஷிங்டன்: ஓராண்டுக்கும் மேலாக அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய ரெக்ஸ் டில்லர்சனை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திடீரென்று பதவியிலிருந்து நீக்கியது அமெரிக்காவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அதிர்ச் சியைக் கொடுத்துள்ளதாகத் தெரி கிறது. திரு டில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ, தனிப்பட்ட முறையில் அதுகுறித்து தான் வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டில்லர்சன் பதவி நீக்கம் செய்யப்பட்ட செய்தி தமக்கு வியப்பாக இருந்தது என்று ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் கூறினார். இருப்பினும் இதனால் அமெரிக்காவுடனான ஜப்பானிய உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று அவர் கூறினார். இதே கருத்தை தென்கொரியாவும் தெரிவித் துள்ளது. டில்லர்சனின் பதவி நீக்கம் ஒரு திடீர் மாற்றம் என்று தென்கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கயுங் வா கூறியுள்ளார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் திரு டிரம்பும் சந்தித்துப் பேசும் திட்டம் குறித்து டில்லர்சனுடன் திருவாட்டி காங் நாளை பேச்சு நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் அலன் பீட்டர், அமெரிக்காவுக்கும் பிலிப் பீன்சிற்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் அரும் பணியாற்றிய டில்லர்சனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் டில்லர்சன் ஆற்றிய பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன. 2