அனைத்துலக உடன்பாட்டிலிருந்து விலகியது பிலிப்பீன்ஸ்

1 mins read

மணிலா: அனைத்துலக உரிமைகள் உடன்பாட்டிலிருந்து பிலிப்பீன்ஸ் விலகுவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார். பிலிப்பீன்சில் போதைப்பொருள் நடவடிக்கைகளை முறியடிக்க திரு டுட்டர்டே எடுத்து வரும் கடும் நடவடிக்கைகள் காரணமாக அவரை பலர் குறை கூறி வருகின்றனர். இதன் காரணமாக அந்த உடன்பாட்டிலிருந்து பிலிப்பீன்ஸ் விலகுவதாக திரு டுட்டர்டே அறிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றச்செயல்களைத் தடுக்க 1998ஆம் ஆண்டு ரோம் நகரில் அனைத்துலக உடன்பாடு காணப்பட்டது.

அந்த உடன்பாட்டில் 123 நாடுகள் கையெழுத்திட்டன. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் திரு டுட்டர்டேக்கு எதிராக பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். மனித குலத்திற்கு எதிராக திரு டுட்டர்டே குற்றங்கள் செய்ததாக அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அனைத்துலக உடன்பாட்டிலிருந்து பிலிப்பீன்ஸ் விலகுவதால் திரு டுட்டர்டே மீது தொடுக்கப்பட்ட வழக்கு நிறுத்தப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.