நான்காவது முறை பிரதமராக மெர்க்கெல்

நான்காவது முறை பிரதமராக மெர்க்கெல்

1 mins read
d804edf5-ae09-4feb-8186-f4781ec72b87
-

பெர்லின்: ஜெர்மன் நாடாளுமன்றம் நான்காவது முறையாக திருவாட்டி ஏஞ்சலா மெர்க்கெலை அந்நாட்டுப் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஜெர்மனியில் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் திருவாட்டி மெர்க்கெல் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த வாக் கெடுப்பில் அவர் அதிக வாக்கு களைப் பெற்று மீண்டும் பிரத மராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்பட்டதும் நாடாளுமன்ற அவை முழுவதும் கரவொலி சத்தமும் மகிழ்ச்சி ஆரவாரமும் நிறைந்திருந்தது.

அவருக்கு நல்வாழ்த்து தெரி வித்தவர்களில் அவரது கணவர் ஜோசிம் சவர் மற்றும் அவரது தாயார் ஹெர்லிண்ட் கஸ்னரும் அடங்குவர். அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஜெர்மன் அதிபரிடமிருந்து முறை யாக நியமன சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திருவாட்டி மெர்க்கெல் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சீர்திருத்த திட்டங்கள் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மெக்ரோனுடன் கலந்து ஆலோசிக்க அவர் நாளை பாரிஸ் செல்லவுள்ளார். மெக்ரோனின் சீர்திருத்தத் திட்டங்களை மெர்க்கெலின் கூட்டணி அரசு வரவேற்றுள்ளது.

ஜெர்மன் அதிபர் ஃபிராங்க் வால்டரிடமிருந்து நியமன சான்றிதழை திருவாட்டி மெர்க்கெல் பெற்றுக்கொள்கிறார். படம்: ஏஎஃப்பி