நஜிப்: தேர்தல் பணி காரணமாக குறைந்த நேரமே தூங்குகிறேன்

1 mins read
69c459e8-db54-414c-9cf0-2b4717a2ceea
-

கோலாலம்பூர்: தேர்தல் நெருங்குவதால் ஒரு நாளைக்கு சில மணி நேரமே ஓய்வு எடுத்துக்கொள்ள முடிகிறது என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். "குறைந்த நேரமே தூங்குகின்றேன், அதிக வேலை, அதிகம் பேசுகிறேன், வாக்குகளும் அதிகமாகக் கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்று திரு நஜிப் கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிகமாகப் பணியாற்ற வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈப்போவில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு திரு நஜிப் பதில் அளித்தார். அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் அரசாங்க ஊழியர்களும் கலந்துகொண்டனர். 1 மலேசியா பொது வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் வீடுகளை வாங்கும் வாய்ப்பினை அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் திரு நஜிப் கேட்டுக்கொண்டார்.