ஜோகூர் பட்டத்து இளவரசரிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் நஸ்ரி

ஜோகூர் பட்டத்து இளவரசரிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் நஸ்ரி

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசிய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் நஸ்ரி அஸிஸ், ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலிடம் மன்னிப்பு பெற விரும்பியுள்ளார். இது தொடர்பான தகவல் 'சவுத்தர்ன் டைகர்ஸ்' என்ற அரச அதிகாரபூர்வ முகநூலில் இடம் பெற்றுள்ளது. எனினும் எந்தக் காரணத்திற்காக திரு நஸ்ரி மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது தெரிய வில்லை.

எனினும் கடந்த 2015ஆம் ஆண்டில் நஸ்ரி விடுத்த அறிக்கை ஒன்றில், ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அரசு சாரா அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொள்ளாதது குறித்து இளவரசர் துங்கு இஸ்மாயில் குறை கூறியிருந்தது தொடர்பில் நஸ்ரி மேற்கண்டவாறு அறிக்கை விடுத்திருந்ததாகத் தெரிகிறது. பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தது தொடர்பில் திரு நஸ்ரி விசாரிக்கப்பட்டார்.