ரஷ்ய தூதர்களை வெளியேற்ற பிரிட்டனுக்கு அமெரிக்கா ஆதரவு

1 mins read

நியூயார்க்: பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நடத்தப்பட்ட நச்சு ரசாயனத் தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா இருக்கக் கூடும் என்று நம்பப்படும் வேளையில் பிரிட்டனில் உள்ள ரஷ்யத் தூதர்கள் 23 பேரை வெளியேற்ற பிரிட்டன் தீர்மானித் துள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளி யைக் கொலை செய்யும் முயற்சி யில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட நச்சு ரசாயனப் பொருள் பயன் படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அது குறித்து ரஷ்யா கடந்த செவ்வாய்க் கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் இதுவரை ரஷ்யா அதன் தொடர்பில் எந்த விளக்கமும் அளிக்காததைத் தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ரஷ்யத் தூதர்களை வெளியேற்றப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். அத்தாக்குதலில் ரஷ்யாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் கூறி வருகின் றனர். ஆனால் ஐநாவிற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, அந்தத் தாக்குதலுக்கு பின்னணி யில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது என்று ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கூறினார்.