சிரியாவில் சண்டை தீவிரம்: வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

சிரியாவில் சண்டை தீவிரம்: வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

1 mins read
3ea824ec-202a-4a5e-b1da-d7b618edb6e0
-

மற்றும் தெற்குப் பகுதிகளில் கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக அரசாங்கப் படை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சண்டைக்குப் பயந்து அப்பகுதி களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக அங்குள்ள தொண்டர்கள் தெரி வித்துள்ளனர். இதுவரை சுமார் 50,000 பேர் அப்பகுதிகளிலிருந்து வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்குப் பகுதியில் உள்ள அஃப்ரின் நகரிலிருந்து சுமார் 30,000 பேர் வெளியேறியுள்ளனர். கிழக்கு கெளட்டா பகுதியி லிருந்து 20,000 பேர் வெளியேறினர்.

சிரியாவில் கடந்த ஏழு ஆண்டு களாக உள்நாட்டுச் சண்டை நீடிக்கும் வேளையில் இதுவரை 12 மில்லியன் பேர் அவர்களின் வீடு களிலிருந்து வெளியேறியிருப்ப தாக தகவல்கள் கூறுகின்றன. குறைந்தது 6 மில்லியன் பேர் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 5.6 மில்லியன் பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். உள்நாட்டுச் சண்டையில் 400,000 பேர் கொல்லப்பட்டதாக அல்லது காணவில்லை என்று நம்பப்படுகிறது.

சிரியாவின் கெளட்டா பகுதியில் அரசாங்கப் படையின் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதால் அங்கிருந்து வெளியேற காத்திருக்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி