வானிலிருந்து தங்க மழை

வானிலிருந்து தங்க மழை

1 mins read
d6f24702-b528-45cf-a949-4b807e549c9d
-

கிராஸ்னோயார்ஸ்: சைபீரியாவில் உள்ள யாகுட்ஸ்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சரக்கில் ஒரு பகுதி காணாமற்போனதை அடுத்து அங்கு வியாழக்கிழமை தங்க மழை பெய்தது. வெள்ளி உலோகம் உட்பட 10 டன் தங்கக் கட்டிகள் அந்த விமானத்தில் கொண்டு செல் லப்பட்டதாகவும் அவற்றுள் ஏராளமான வெள்ளி-தங்கக் கட்டிகள் அந்த விமான நிலையத் திலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவு வரை சிதறிக்கிடந்த தாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொத்தம் 21 மில்லியன் சைபீரிய டாலர் (S$480 மில்லியன்) மதிப்புள்ள வெள்ளி, தங்கக் கட்டிகள் அந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. வீசிய பலத்த காற்றில் அந்த விமானத்தின் சரக்கு அறைக் கதவு உடைந்து நொறுங்கியதால் சரக்கில் ஒரு பகுதி ஓடுபாதையில் விழுந்ததாக யாகுட்ஸ்க் விமான நிலையத்தின் அறிக்கை தெரிவித்தது.

சைபீரிய விமான நிலைய ஓடுபாதையில் சிதறிக்கிடக்கும் வெள்ளி- தங்கக் கட்டிகள். படம்: ஏஎஃப்பி