எஃப்பிஐ துணை இயக்குநர் பதவி நீக்கம்

1 mins read

வா‌ஷிங்டன்: எஃப்பிஐ எனப் படும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி ஆண்ட்ரூ மெக்கேப் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அப்பதவி யிலிருந்து விலகிய ஆண்ட்ரூ மெக்கேப் அவரது 50வது பிறந்தநாளான இன்று அதிகாரபூர்வமாக ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவரை அமெரிக்க அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி ஜெஃப் செசென்ஸ் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

ஒரு விரிவான மற்றும் நியாயமான விசார ணைக்குப் பின்னரே மெக்கேப் விவகாரத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது என்று நீதித்துறைக்குத் தலைமை தாங்கும் ஜெஃப் செசென்ஸ் கூறினார். ஹில்லரி கிளின்டனின் மின்னஞ்சல்கள் மற்றும் 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலை யீடு பற்றிய எஃப்பிஐ விசாரணை யில் டிரம்ப் தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டிய மெக்கேப், டிரம்ப்பை குறை கூறி வந்தார்.