கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ

கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ

1 mins read
69dd377b-f6f3-444c-8662-8443d64aabc0
-
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் மிகப் பெரிய மருத்துவமனையான கோலாலம்பூர் மருத்துவமனையில் நேற்று தீ மூண்டதாகவும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்குள்ள நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனை வரும் அங்கிருந்து வெளியேற்றப் பட்டதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மருத்துவமனையின் தடயவியல் பகுதியில் தீ மூண் டது. நச்சு ரசாயனத் தாக்குதலால் மரணம் அடைந்த கிம் ஜோங் நாமின் உடல் இந்த தடயவியல் நிலையத்தில்தான் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திடீரென்று தீப்புகை மருத்துமனையை சூழ்ந்த தால் பீதியடைந்த மக்கள் மருத்துவ மனை வளாகத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர். மருத்துவமனை வார்டுகளில் இருந்த நோயாளிகள் அனைவ ரையும் மருத்துவமனை ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றினர். மருத்துவமனையில் மூண்ட தீயை தீயணைப்பாளர்கள் அணைத்து விட்டதாகவும் தீ விபத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ மூண்டதைத் தொடர்ந்து நோயாளிகள், பார்வையாளர்கள் உட்பட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். படம்: சைனா பிரஸ்