சீனாவில் நாடாளுமன்றம் தற்போதைய அதிபர் ஸி ஜின்பிங்கை மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இரண்டாம் தவணைக் காலத்திற்கு ஸி ஜின்பிங்கை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். திரு ஸி ஜின்பிங் கால வரையறையின்றி பதவியில் நீடிக்க அனுமதிக்கும் வகையில் அதிபருக்கான தவணைக்கால வரம்பு அகற்றப்பட்ட சில நாட்களில் அவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய ராணுவ கமிஷன் தலைவராகவும் திரு ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது நெருங்கிய நண்பரான வாங் கியூஷான் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீன அதிபராக மீண்டும் ஸி ஜின்பிங்
1 mins read
-

