கோலாலம்பூர்: மலேசியாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் தேசிய முன்னணி அதன் தேர்தல் அறிக்கையை வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வெளி யிடப்போவதாக அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் முதன் முறையாக இளையர்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றிருக்கும் என்று கூறப் படுகிறது. மலேசியாவின் 14.9 மில்லியன் வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் இளையர்கள் என்பதை கருத்தில்கொண்டு அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பல திட்டங்களை உள்ளடக்கியுள்ளது அந்த அறிக்கை. மலேசிய வாக்காளர் களில் பெண்களும் சரிசமமாக இருப்பதால் பெண்களுக்கு உதவும் திட்டங்களும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
சமுதாயத்தின் எல்லா பிரிவினர் மற்றும் எல்லா வயதினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல திட்டங்கள் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளன. மக்களின் பொருளியல் பற்றிய விவகாரமும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.