மியன்மாரில் இருந்து நாடற்றவர்களாக வெளியேறும் ரோகிங்யா மக்கள், ஈராக், சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிர வாத இயக்கத்தில் சேரும் ஆபத்து உள்ளதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அச்சம் தெரிவித் துள்ளார். மியன்மாரின் ராக்கைன் மாநிலத் தில் ராணுவம் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலுக்கு அஞ்சி சுமார் 700,000 ரோகிங்யா முஸ்லிம்கள் மியன்மாரை விட்டு வெளியேறியுள் ளனர். சிறு பான்மை இனத்தவரைத் துடைத் தொழிக் கும் மியன்மாரின் போக்கை ஐக்கிய நாடுகள் மன்றம் கண்டித் துள் ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துவரும் மியன்மார், கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தாக்குதல் ரோகிங்யா தீவிரவாதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டதாகக் கூறி வரு கிறது.
இந்நிலையில் மலேசியப் பிரத மர் நஜிப் ரசாக், மியன்மாரில் இருந்து வெளியேறும் ரோகிங்யா மக்கள், தீவிரவாதிகள் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளார். இது மியன்மாருக்கு மட்டுமல்லாது அதன் அண்டை நாடுகளான தென்கிழக்காசிய நாடு களுக்கும் பெரும் மிரட்டலாக உரு வெடுக்கும் என்றும் கூறியுள்ளார். மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி கலந்துகொண்ட சிட்னியில் நடை பெற்ற ஆசியான் - ஆஸ்திரேலியா மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் இதனைத் தெரிவித்தார்.
ரோகிங்யா பிரச்சினையை உள்நாட் டுப் பிரச்சினை என்று மட்டும் கூறிவிட முடியாது. எனவே இதை மனிதாபிமான முறையில் மட்டும் பார்க்கக்கூடாது. இது இந்த வட்டாரத்தில் பாதுகாப்பு மிரட்டலாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளது என்ற கண்ணோட்டத்தில் தீர்வுகாண வேண்டும் எனவும் பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டார்.

