சுவீடன், வடகொரியா பேச்சுவார்த்தை டிரம்ப் - கிம் சந்திப்புக்கு வழி வகுக்கலாம்

சுவீடன், வடகொரியா பேச்சுவார்த்தை டிரம்ப் - கிம் சந்திப்புக்கு வழி வகுக்கலாம்

2 mins read

ஸ்டாக்கோம்: சுவீடன், வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் களின் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் முடிவுற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி யையும் பாது காப்பையும் கருத் தில் கொண்டு இந்த மூன்று நாள் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் கொரியத் தலை வர் கிம் ஜோங் உன் ஆகியோ ரின் சந்திப்புக்கு வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக வடகொரியா வின் வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோ, கடந்த வியாழக் கிழமை சுவீடனின் ஸ்டாக்கோம் வந்து சேர்ந்தார். அங்கு அவரும் சுவீட னின் வெளி யுறவு அமைச் சர் மார் கோட் வால்ஸ்ட்ரோமும் சந் தித்து வட கொரி யாவின் அணுவாயுதக் கொள் கைகள் பற்றி உயர்நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் அமெரிக்க அதி பர் டிரம்ப் வடகொரியத் தலை வர் கிம்மை தாம் சந்திக்க விரும்புவதை மறுஉறுதிப்படுத் தினார். அமெ ரிக்கா, வடகொ ரியா ஆகிய நாடு களுக்கு இடையேயான சந்திப்புக்கு தென்கொரியா சென்ற மாதம் அழைப்பு விடுத்திருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார். ஆனால் அதிபர் டிரம்புடன் ஆன சந்திப்புக்கு வடகொரியா எவ்விதப் பதிலையும் வெளியிடவி ல்லை. வடகொரியா, சுவீடன் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கொரியத் தீப கற்பத் தில் நிலவிவரும் பதற்றத் தைத் தணிக் கவும் தென்கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவும் வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.