சிட்னி: ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் நகரத்தை நேற்று புயல் தாக்கி பெரும் சேதத்தை உண்டு பண்ணியது. அதனைத் தொடர்ந்து விமானச் சேவை களும் போக்குவரத்துச் சேவை களும் நிறுத்தப்பட்டதோடு, பள்ளி களும் வணிக நிறுவனங் களும் மூடப்பட்டன. ஆனால் விமானச் சேவைகள் மட்டும் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கின. இந்தச் சூறாவளியில் சிக்கி பலியானோர் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சனிக் கிழமையன்று மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் வீசிய அந்தச் சூறாவளி, சாலைகளின் ஓரங் களில் உள்ள மரங்களை வேரோடு சாய்த்து போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆ ஸ் தி ரே லி யா வி ன் வடக்குக் கடற்கரைப் பகுதியைத் தாக்கிய மார்கஸ் சூறாவளி இந்தியப் பெருங்கடலை நோக் கிச் செல்லும் என்றும் அது மேலும் மோசமான புயலாக உரு வெடுத்து மணிக்கு 165 கி.மீ. முதல் 224 கி.மீ. வேகத்தில் தாக்கும் என்றும் அந்நாட்டின் வானிலை நிலையம் தெரி வித்துள்ளது.
தங்கள் வாகனத்தின்மீது மரம் விழுந்தபோதும், விழுந்துகிடக்கும் மரத்தின் கிளைகளில் உல்லாசமாய்த் தாவி விளையாடும் டார்வின் வாசிகள். படம்: ராய்ட்டர்ஸ்

