மணிலா ஹோட்டலில் தீ: பலர் மரணம்; ஹெலிகாப்டரில் மீட்பு

மணிலா ஹோட்டலில் தீ: பலர் மரணம்; ஹெலிகாப்டரில் மீட்பு

1 mins read
0f6fd594-3373-498a-93f4-2c5454801939
-

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் நேற்று பயங்கர தீ மூண்டது. அதில் நான்கு பேர் மாண்டுவிட்டதாக முதலில் வந்த தகவல்கள் கூறின. ஐந்தாவது மாடியில் 19 பேர் மாட்டிக்கொண்டதாக மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றவர்கள் ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்ட தாக அதிகாரிகள் கூறினர். வாட்டர்ஃபிரண்ட் மணிலா பெவிலியன் என்ற அந்த ஹோட்ட லில் மூண்ட தீ, ஆறு மணி நேரம் எரிந்ததாகவும் 300 பேருக்கும் அதிகமான மக்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகளும் நகர நிர்வாக அதி காரிகளும் தெரிவித்தனர். ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். மாண்டுவிட்ட நால்வரில் இருவர் ஹோட்டல் ஊழி யர்கள் என்று மணிலா நகர பேரிடர் தவிர்ப்புக் குழு தலைவர் ஜோனி தெரிவித்தார்.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கும் மணிலா பெவிலியன் என்ற ஹோட்டலில் நேற்று பயங்கர தீ மூண்டது. அந்தத் தீயில் மாட்டிக்கொண்ட ஊழியர்களையும் விருந்தினர்களையும் காப்பாற்றும் முயற்சியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. படம்:PHILIPPINE DAILY INQUIRER