கைத்தொலைபேசியில் பேசியபடி சாலையில் நடந்தால் அபராதம்

1 mins read
3e1d7495-7221-4a75-8b02-ab8c0977d317
-

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மோண்ட்கிளர் நகரில் சாலையைக் கடக்கும் போது கைத் தொலைபேசிகளில் பேசியபடி செல்லும் நடையர்களுக்கு அப ராதம் விதிக்கப்படும். அத்தகைய ஒரு செயல், சட்ட விரோத காரியம் என்று அந்த மாநிலம் அறிவித்துள்ளது. கைத் தொலைபேசியைப் பயன்படுத்திய படி, காதில் சாதனத்தைப் பொருத் திக்கொண்டு பாட்டு கேட்டபடி, குறுஞ்செய்தி போன்றவற்றை அனுப்பியபடி சாலையைக் கடப்பது சட்டவிரோதமான ஒரு செயல் என்று அந்த மாநிலம் அறிவித்து உள்ளது. அத்தகைய சட்டவிரோத செய லில் ஈடுபடும் யாருக்கும், அவர் முதல் தடவை அந்தக் குற்றத்தை செய்திருந்தால் US$100 அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் அதே குற்றத்தைச் செய்தால் US$500 அபராதத் தொகையை அவர் செலுத்தவேண்டியிருக்கும். அமெரிக்காவின் இதர பல நகர்களிலும் இதேபோன்ற நடை முறைகள் நடப்புக்கு வந்துள்ளன.