அமெரிக்க கைதிகளை விடுவிக்க வடகொரியாவுடன் பேச்சு

அமெரிக்க கைதிகளை விடுவிக்க வடகொரியாவுடன் பேச்சு

1 mins read

சோல்: வடகொரியாவில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மூவரை விடுவிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் வடகொரியா, அமெரிக்கா, சுவீடன் ஆகிய மூன்று நாடுகளின் அதிகாரிகள் ஈடுபட்டுள் ளதாக தென்கொரியா வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இத்தகவலை வட கொரியா இன்னும் உறுதிப்படுத்த வில்லை. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்துப் பேச இணங்கியதைத் தொடர்ந்து, வட கொரியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர் பில் பேச்சுவார்த்தை நடை பெறுவதாகக் கூறப்படுகிறது.

அந்த மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பில் வட கொரி யாவும் அமெரிக்காவும் ஏற்கெனவே இறுதி உடன்பாடு கண்டதாக தென்கொரிய தொலைக்காட்சித் தகவல் தெரிவித்தது. கைதிகள் விடுவிப்பு குறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோ, சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது.