பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசிய பணிப்பெண்ணை காயப்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனையை எதிர்நோக்கிய மலேசிய மாது ரோசிட்டா முகம்மது அலி கடந்த வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயா வில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கால நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டார். அந்த மாதுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்திய போதிலும் அந்த மாது, சிறைத்தண்டனையிலிருந்து தப்பியது பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த மலேசிய மாதுக்கு எதிராக ஒரு மனு தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த மனுவில் நேற்று பிற்பகல் வரையில் சுமார் 41,337 பேர் கையெழுத்திட்டிருந்தனர். அந்த மனுவில் மொத்தம் 50,000 பேர் கையெழுத்திட்ட பிறகு அந்த மனு பிரதமர் நஜிப் ரசாக்கிடமும் பிரதமர் அலுவலக அமைச்சர் அசலினாவிடமும் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

