பிரிட்டிஷ் ஆசிரியருக்கு உலகளாவிய ஆசிரியர் விருது

1 mins read
55f68391-ec80-4aa3-8594-e57880b557f8
-

துபாய்: பிரிட்டனின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஆண்ட்ரியா ஸஃபிராகோவ் இந்த ஆண்டுக்கான உலகளாவிய ஆசிரியர் விருதைப் பெற்றுள்ளார். துபாயில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அந்த விருதுக்கான 1 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.32 மில்லியன்) பரிசுத் தொகையை அவர் பெற்றுக்கொண்டார். லண்டனில் புறநகர் பகுதியில் உள்ள அல்பெர்டான் கல்லூரியின் கலைத்துறை ஆசிரியராக ஆண்ட்ரியா பணியாற்றுகிறார். இந்த விருதுக்கு உலகளவில் பலர் போட்டியிட்டனர். அவர்களில் 10 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்ற ஆண்ட்ரியாவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

பிரிட்டிஷ் ஆசிரியர் ஆண்ட்ரியா, துபாய் மன்னர் ஷேக் முகம்மது பின் ர‌ஷித் அல் மாக்டோமிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்கிறார். படம்: ஏஎஃப்பி