மாஸ்கோ: ரஷ்ய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு விளாடிமிர் புட்டினுக்கு உலகத் தலைவர்களிடமிருந்து வாழ்த்து கள் வந்த வண்ணமாக உள்ளன. ஆனால் திரு புட்டினின் வெற்றி குறித்து மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எவரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. திரு புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்யா வுடனான தமது நாட்டின் பங்காளித்துவ உறவு வரவாற்றில் மிகச் சிறந்த நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கசகஸ்தான், பெலாரஸ், வெனிசுவேலா, பொலிவியா, கியூபா ஆகிய நாடுகளின் தலைவர்கள் திரு புட்டினுக்கு வாழ்த்துச் செய்தி அனுப் பியுள்ளனர்.
ஆனால் மேற்கத்திய நாடு களின் தலைவர்களிடமிருந்து திரு புட்டினுக்கு இதுவரை வாழ்த்துச் செய்தி வரவில்லை என்று கூறப்பட்டது. பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி நச்சு வேதிப்பொருளால் தாக்கப் பட்டதைத் தொடர்ந்து அண்மைய வாரங்களாக ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் திரு விளாடிமிர் புட்டின் 76 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு திரு புட்டின் அதிபர் பதவியில் நீடிப்பார்.
மாஸ்கோவில் ஆதரவாளர்கள் முன்னிலையில் திரு புட்டின் உரையாற்றினார். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். படம்: ஏஎஃப்பி

