'போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை'

'போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை'

1 mins read

வா‌ஷிங்டன்: போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண் டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தி யுள்ளார். நியூஹாம்ஷயரில் உரை யாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். டிரம்ப்பின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. "போதைப்பொருளால் பலரது வாழ்க்கை சீரழிந்து வருகிறது. போதைப்பொருளுக்கு அடிமை யாகி பலர் மரணம் அடைவதை உடனடியாக தடுக்க வேண்டும். அதற்காக நடவடிக்கை மேற் கொள்ளப்படும். போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்த மாட்டோம்," என்று டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் 2.4 மில்லி யன் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக கணக் கிடப்பட்டுள்ளது.