லண்டன்: பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி நச்சு வேதிப்பொருளால் தாக் கப்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித் துள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளி யையும் அவரது மகளையும் கொலை செய்ய முயன்றதில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட வேதிப்பொருள் பயன்படுத்தப் பட்டது தெரியவந்துள்ளது என்று பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அதுகுறித்து ரஷ்யா விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண் டது. ஆனால் அதன் தொடர்பில் ரஷ்யா எந்த விளக்கமும் அளிக் காததைத் தொடர்ந்து பிரிட்டனில் உள்ள, ரஷ்யத் தூதர்கள் 23 பேரை வெளியேற்றவிருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே சென்ற வாரம் அறிவித்திருந்தார்.
லண்டனில் உள்ள ரஷ்யத் தூதரகத்திலிருந்து வெளியேறும் ரஷ்ய அதிகாரிகள். படம்: ஏஎஃப்பி

