மடகாஸ்காரில் புயலில் சிக்கி 20 பேர் பலி

மடகாஸ்காரில் புயலில் சிக்கி 20 பேர் பலி

1 mins read
cd59eb60-2ef6-4033-9e6c-68286c385b01
-

மடகாஸ்காரில் வீசிய பலத்த புயல்காற்றில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் தெருக்களிலும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வெள்ளநீர் தேங்கியிருப்பதால் அந்த சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் புயலால் அங்கு 19,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் மடகாஸ்கார் தீவும் ஒன்று. இங்கு அடிக்கடி வீசும் சூறாவளிக் காற்றினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்