மலாக்கா: மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய முன்னணி கட்சியின ரிடம் நினைவூட்டியுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாம் பொதுத்தேர்தலில் ஒருவருக்கு ஒருவர் துரோகம் இழைக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார். தேசிய முன்னணியின் தலை வருமான திரு நஜிப், தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமை யாகச் செயல்படுவது அவசியம் என்று கூறினார். "நம்மை நாமே சுட்டுக்கொல்லக் கூடாது, நமது நண்பர்களை நாமே எட்டி உதைக்கக் கூடாது, வெற்றியை உறுதி செய்ய ஒன்று பட்டு பாடுபட வேண்டும்," என்றார் அவர்.
மலாக்காவில் உள்ள புக்கிட் காட்டில் தொகுதியில் பிரதமர் பேசினார். அப்போது திரு நஜிப் பின் மனைவி ரோஸ்மா மன்சூர், மலாக்கா முதல்வர் இட்ரிஸ் ஹாரோன், புக்கிட் காட்டில் அம்னோ பிரிவு தலைவர் முஹமட் அலி ரஸ்தோம் ஆகியோர் உடன் இருந்தனர். "மலாக்காவில் எதிர்க்கட்சி களின் வசமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றான புக்கிட் காட்டில் தொகுதியை மீண்டும் கைப்பற்ற தேசிய முன்னணியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அந்தத் தொகுதி மீண்டும் நம் மிடம் வர வேண்டும். இதற்காக ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும். அம்னோ வெற்றி பெற்றால், தேசிய முன்னணியும் வெற்றி பெறும்," என்று மேலும் பிரதமர் சொன்னார்.
தேர்தலில் ஒற்றுமையாகச் செயல் பட தேசிய முன்னணியினருக்கு பிரதமர் நஜிப் வலியுறுத்து. கோப்புப் படம்: ஏஎஃப்பி

