நேப்பிடாவ்: மியன்மார் அதிபர் டின் கியவ் பதவி விலகியிருப் பதாக அந்நாட்டின் அதிபர் அலு வலகம் நேற்று தெரிவித்தது. அதிபர் பதவி விலகியதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வில்லை. ஆனால் அண்மைய மாதங்களாக அரசாங்க நிகழ்ச்சி களில் அவர் மெலிந்து காணப் பட்டார். இதனால் அவரது உடல் நிலை குறித்து கவலை எழுந்தது. திரு டின் கியவ்வுக்கு வயது 71. மியன்மாரில் பத்து ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டிய 2016ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலுக்குப் பிறகு அவர் அதிபர் பொறுப்பை ஏற் றார். ஆனால் அது ஒரு சடங்குபூர்வ பதவியாகவே கருதப்பட்டது. அவ ரது பின்னணியில் மியன்மாரின் நீண்டகால எதிர்க்கட்சித் தலை வியான ஆங் சான் சூச்சி அதிப ராகச் செயல்பட்டார்.
இந்நிலையில் அதிபரின் ஃபேஸ்புக் பக்கத்தில், திரு டின் கியவ் ஓய்வு எடுக்க விரும்புவதாக அதிபர் அலுவலகம் தெரி வித்தது. இதனால் முன்னாள் தளபதியும் உதவி அதிபருமான மியிண்ட் ஸ்வே, புதிய அதிபர் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக அதிபராக நீடிப்பார் என்றும் அலுவலகம் கூறியது. ராணுவ ஆட்சியில் பல ஆண்டுகாலம் சிறைவாசம் அனு பவித்த ஆங் சான் சூச்சிக்கு உயர் பதவி ஏற்க தடை உள்ளது. இதனால் மற்றொருவரை அதிபர் பொறுப்பில் அவர் அமர்த் தியிருந்தார்.
ஆங் சான் சூச்சியுடன் அதிபர் பதவியிலிருந்து விலகிய டின் கியவ். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

