கொசோவோ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ரகளை

கொசோவோ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ரகளை

1 mins read
bf97643a-d49c-4731-b9cd-412ab4495a9b
-

சர்ச்சைக்குரிய மசோதா குறித்து கொசோவோ நாடாளுமன்றத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. புதிய எல்லை உடன்பாடு குறித்த அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர். அந்த மசோதா குறித்து வாக்களிப்பு நடத்தப்படுவதைத் தடுப்பதற்காக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதும் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்