மலேசியா: திருத்தப்பட்ட தேர்தல் தொகுதி அறிக்கை விரைவில் தாக்கல்

மலேசியா: திருத்தப்பட்ட தேர்தல் தொகுதி அறிக்கை விரைவில் தாக்கல்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் தொகுதி அறிக்கையை மலேசிய அரசாங்கம் இம்மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப் படுவதற்கு முன்னதாக அதன் பிரதிகள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்று நாடாளு மன்ற நாயகர் பண்டிகார் அமின் முலியா கூறினார்.

தேர்தல் தொகுதி இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முன்கூட்டியே அறிவிக்கத் தடை விதிக்கப்பட்டுள் ளது. இருப்பினும் அந்தப் பரிந் துரைகளை ஆரம்பக் கட்டத் திலேயே தேர்தல் ஆணையம் வெளியிட்டதால் ஆளும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப் பினர்களுக்கு ஏற்கெனவே அதுபற்றி தெரிந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் தொகுதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள், தேசிய முன்னணி 2008ஆம் ஆண்டு தேர்தலில் இழந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை வெற்றியை திரும்பப் பெற உதவக்கூடும் என்று மெர்டேக்கா நிலையத்தைச் சேர்ந்த இப்ராகிம் சஃபின் கூறியுள்ளார்.