அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்ட்டன் நியமனம்

1 mins read
f96008e8-f6c3-436b-a859-92b31c31748a
-

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஹெச்.ஆர். மெக் மாஸ்டருக்குப் பதிலாக ஜான் போல்ட்டனை நியமனம் செய் துள்ளார் அதிபர் டோனல்ட் டிரம்ப். திரு போல்ட்டன் கடந்த 14 மாதங்களில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்து வந்த திரு மெக்மாஸ்டருக்கு டுவிட்டர் மூலம் அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்தார். திரு மெக்மாஸ்டர் தமது பணிகளை மிகச் சிறப்பாக செய்துள்ளதாகவும் அவர் தொடர்ந்து தமது நண்பராக இருப்பார் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்கும் ஜான் போல்ட்டன். படம்: ராய்ட்டர்ஸ்