பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள டிரேபிஸ் நகரில் நேற்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்கு தலால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்குள்ள பேரங்காடி ஒன்றில் துப்பாக்கிக்காரன் ஒருவன் குறைந்தது இருவரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந் ததாக பிரெஞ்சு போலிசார் கூறி னர். தாக்குதலில் குறைந்தது ஒருவர் மரணம் அடைந் திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
பிணைக்கைதிகளில் ஒருவர் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்றும் டிரேபிஸ் போலிஸ் தலைவர் ஜான் வேலரி லெட்டர் மன் செய்தியாளர்களிடம் அச்சம் தெரிவித்தார். ஆனால் சம்பவ இடத்துக்கு மருத்துவரை அனுப்ப முடியாததால் இதை உறுதி செய்ய முடியவில்லை என்றார் அவர். ஆனால் உள்ளூர் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்று இருவர் மாண்டுவிட்டதாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் செய்தி வெளியாக்கியது.
அதற்கு முன்பு பேரங்காடிக்குள் எட்டு பிணைக்கைதிகள் இருந் ததாக போலிஸ் தரப்பு கூறி இருந்தது. போலிஸ் அதிகாரி ஒருவரை அந்த பயங்கரவாதி பேரங்காடியில் பிணைக்கைதியாக வைத்திருப்ப தாகவும் மற்ற பிணைக்கைதிகள் விடு வி க் க ப் ப ட் டு ள்ளதாக வு ம் டிரேபிஸ் நகரின் மேயர் பிரெஞ்சுத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார். இம்மாதிரி பலவிதமான தகவல்கள் வெளிவருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

