பெய்ஜிங்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்குமாறு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி களுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதற்கு பதில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்கப் போவதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் பழங்கள், மது வகைகள், எஃகு குழாய்கள் மற்றும் மறுபயனீட்டு அலுமினியப் பொருட்கள் வரை 3 பில்லியன் டாலர் (S$3.9 பில்லியன்) மதிப் பிலான 28 பொருட்களுக்கு வரி விதிக்கவிருப்பதாக சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு வரி விதிக்கப் போவதாக இம்மாதம் முதல் தேதி அமெரிக்கா அறிவித்தது. பல ஆண்டுகளாக அமெரிக் காவின் அறிவுசார் சொத்துகளை சீனா திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பில் பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தை பலன் அளிக்காததைத் தொடர்ந்து சீனாவி லிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க திரு டிரம்ப் திட்ட மிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அறிவித்தது.

