மார்ச் 29ஆம் தேதி இரு கொரியாக்கள் பேச்சு

மார்ச் 29ஆம் தேதி இரு கொரியாக்கள் பேச்சு

1 mins read

சோல்: இம்மாதம் 29ஆம் தேதி உயர்மட்ட நிலையில் தென் கொரியாவுடன் பேச்சு நடத்த வடகொரியா இணங்கியிருப்ப தாக தென்கொரியா தெரிவித் துள்ளது. இரு கொரியாக்களின் தலைவர்கள் வரும் ஏப்ரல் மாதம் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் குறித்து பேச்சுநடத்த பான் முஞ்சோம் கிராமத்தில் அதிகாரி கள் சந்திக்கவுள்ளனர். வடகொரியாவின் ஒருங் கிணைப்புக் குழுவின் தலைவர் ரி சன் கோன் தலைமையில் மூன்று அதிகாரிகள் தென் கொரிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவிருப்பதாக தென்கொரியா வின் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசுவது குறித்து தென்கொரியா கூறிய யோசனைக்கு வடகொரியா நேற்று சம்மதம் தெரிவித்ததாக தென்கொரிய அமைச்சு தெரிவித்துள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் மே மாதம் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இருகொரியாக்களின் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசவுள்ளனர்.