'மே மாதம் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம்'

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய பொதுத் தேர்தல் தேதி பற்றி மலேசிய துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றொரு குறிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பூமிபுத்ரா கல்வி சுற்றுலாவை தொடங்கிவைத்து உரையாற்றிய திரு ஸாஹிட், மே மாத்தில் அல்லது அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம் என்ற சமிக்ஞையை வெளிப் படுத்தியுள்ளார். இதற்கு முன்பும் திரு ஸாஹிட் இது போன்ற குறிப்பை அறிவித்திருந்தார்.

பிப்ரவரி மாதம் சீனப் புத்தாண்டுக்குப் பிறகு தேர்தல் வரலாம் என்றும் பின்னர் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கிடையே தேர்தல் தொகுதி அறிக்கை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறிப்பாணை ஒன்றை பெர்சே அமைப்பு, நாடாளுமன்ற நாயகரிடமும் பிரதமரிடமும் கொடுக்கவிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.