தேசிய நலன்களைத் தற்காக்க சீனாவிடம் வலிமை உள்ளது

தேசிய நலன்களைத் தற்காக்க சீனாவிடம் வலிமை உள்ளது

1 mins read

பெய்ஜிங்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட் களுக்கு வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முடிவை கடுமையாகச் சாடிய சீனா, அப்படி நடந்தால் சீனா அதன் தேசிய நலன்களைப் பாதுகாக்க ஆயத்தமாக இருப் பதாகவும் அதற்கான வலிமை சீனாவிடம் இருப்பதாகவும் சீன துணைப் பிரதமர் லியு ஹி கூறியுள்ளார். அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் முனுசின்னிடம் தொலைபேசியில் பேசியபோது திரு லியு இவ்வாறு கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்துலக வர்த்தக விதிமுறைகளை அமெரிக்கா மீறி யுள்ளதாகக் கூறிய திரு லியு, அமெரிக்காவின் அத்தகைய செயல் சீனா அல்லது அமெரிக்கா அல்லது உலக நாடுகளின் நலன்களுக்கு எவ்வித நன்மையும் பயக்காது என்று கூறினார். இருப்பினும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நிலையான வர்த்தகத்தைக் கட்டிக்காக்க இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்ற முடியும் என்று சீனா நம்பிக்கை கொண்டிருப்ப தாகவும் திரு லியு கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.