ஜோகூர் அருகே மூழ்கிய படகு: இருவர் உயிருடன் மீட்பு

ஜோகூர் அருகே மூழ்கிய படகு: இருவர் உயிருடன் மீட்பு

1 mins read
4bf6b9dc-58ac-4d26-bedd-8b03054c36cf
-

மூவார்: ஜோகூர், மூவாருக்கு அருகே நீரி ணைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மணல் தோண்டும் படகு ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடு பட்டிருந்த குழுவினர் சீனா வைச் சேர்ந்த இரு மாலுமி களை உயிருடன் மீட்டுள் ளனர். படகு மூழ்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு காப்பாற்றப்பட்ட மாலுமிகள் இருவரும் மூவார் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மலே சிய கடல்துறை அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். அவ்விருவரும் பலவீனமாக இருந்த போதிலும் அவர்களுக்கு சுயநினைவு இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார். இன் னும் 12 சிப்பந்திகளைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த 12 பேரில் 10 பேர் சீனர்கள் என்றும் ஒருவர் மலேசியர் என்றும் மற் றொருவர் இந்தோனீசியர் என்றும் கூறப்பட்டது. காணாமற்போன சிப் பந்திகள் 12 பேரும் உயி ருடன் இருப்பார்கள் என்று இன்னமும் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப் பதாக மலேசிய அதிகாரி கூறினார். சீனாவுக்குச் சொந்தமான அப்படகு மூழ் கியதற்கான காரணம் இன் னும் கண்டறியப்படவில்லை.

ஜோகூர் அருகே மூழ்கிய மண் தோண்டும் படகு. படம்: ராய்ட்டர்ஸ்