பிரான்ஸ் நாட்டில் பயங்கரவாதி அரங்கேற்றிய படுகொலைச் சம்ப வத்தின்போது ஒரு மாதுக்குப் பதிலாக பிணையாகப் பிடிபட முன்வந்த போலிஸ் அதிகாரி மரணமடைந்துவிட்டார் என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் கொலும்ப் தெரிவித்தார். லெப்டினெண்ட் கர்னல் அர்னார்ட் பெல்ட்ராம், 45, என்ற அந்த அதிகாரியின் தியாகத்தை, துணிச்சலை பிரான்ஸ் என்றென் றும் மறவாது என்று அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டார்.
பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் ட்ரிபஸ் என்ற நகரில் ஒரு பேரங்காடியில் நுழைந்து மூவரைக் கொன்று, பலரைக் காயப்படுத்திய லாக்டிம் என்ற 25 வயது பயங்கரவாதி கைவரிசை காட்டியபோது அங்கு விரைந்த போலிஸ் அதி காரிகளில் பெல்ட்ராமும் ஒருவர். பயங்கரவாதி ஒரு மாதைப் பிணையாகப் பிடித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த அதி காரி, அந்த மாதை விட்டுவிட்டு தன்னைப் பிடித்துவைத்துக் கொள்ளும்படி துப்பாக்கிக்காரனி டம் கேட்டார்.
அச்சம்பவத்தில் மூன்று தடவை சுடப்பட்ட அந்த அதிகாரி பிறகு மருத்துவமனை யில் மரணமடைந்துவிட்டார். போலிஸ் அதிகாரி பெல்ட்ராமை 'கதாநாயகன்' என்று பிரான்ஸ் பிரதமர் மேக்ரோன் வர்ணித்தார். "அந்த அதிகாரி பல உயிர் களைக் காத்து இருக்கிறார். தன் சக அதிகாரிகளுக்கும் நாட் டிற்கும் பெருமை சேர்த்து உள் ளார்," என்றார் பிரதமர்.<p>
லெப்டினெண்ட் கர்னல் அர்னார்ட் பெல்ட்ராம். படம்: ஏஎஃப்பி

