மலேசிய போலிசார், பயங்கரவாதி கள் என்று சந்தேகிக்கப்படும் ஏழு பேரை பிடித்து இருக்கிறார் கள். அவர்கள் மலேசியாவின் சாபா, ஜோகூர் மாநிலங்களில் பல தாக்குதல்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததாக தெரி விக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்தேகப்பேர்வழி களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் கிளை அதிகாரி கள், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதிக்கும் மார்ச் மாதம் 15ஆம் தேதிக்கும் இடையில் மேற்கொண்ட பல நடவடிக்கை களில் கைதுசெய்தனர்.
மலேசியாவின் போலிஸ் தலைவர் நேற்று அறிக்கை ஒன்- றில் இந்த விவரங்களைத் தெரி வித் தார். சந்தேகப் பேர்வழிகளில் ஆறு பேர் ஜோகூரில் சிக்கினர். அவர்கள் சிரியா, ஈராக்கில் செயல்படும் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள். அந்தப் பேர்வழி கள் முஸ்லிம்கள் அல்லாத மற்ற வர்களின் வழிபாட்டு இடங்க ளைத் தாக்க திட்டமிட்டு இருந் தார்கள். போலிஸ் அதிகாரிக- ளைக் கடத்திச் சென்று கொலை செய்வதும் அவர்களின் சதித் திட்டமாக இருந்தது என்று போலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகம் மது ஹாருன் தெரிவித்தார். முதன்முதலாக கடந்த பிப்ர வரி 27ஆம் தேதி மூன்று சந் தேகப்பேர்வழிகள் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாருவில் இருக்கும் வழிபாட்டு இடங்களைத் தாக்கு வதற்கான திட்டங்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்த 37 வயது தொழில்நுட்பர் ஒருவர் புதிய தீவிரவாதிகளை மும் முரமாகச் சேர்த்து வந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.

