வாஷிங்டன்: முன்னாள் ரஷ்ய உளவாளி ஒருவருக்கு பிரிட்டனில் விஷமூட்டப்பட்ட விவகாரத்தை அடுத்து ஒரு டஜன் ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற அதி பர் டோனல்ட் டிரம்ப் (படம்) தயா ராகி வருவதாக அச்சம்பவம் பற்றி நன்கறிந்த இருவர் கூறியதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டு உள்ளது. அவர்களை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசகர்கள் அளித்த பரிந்துரைகளை டிரம்ப் ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும் அநேகமாக இன்று அவர் அதற் கான நடவடிக்கையை எடுப்பார் என்றும் கூறிய அவர்கள் இருப் பினும் டிரம்ப் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு இறுதி முடிவெடுக்க மாட்டார் என்றனர்.
நடவடிக்கை எடுக்கத் தயாராக இருந்தபோதிலும் இவ்விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கையை எடுக்கத் தயாராக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறாராம். பிரிட்டனை விட்டு வெளி யேறுமாறு ஏற்கெனவே 23 ரஷ்யர் களுக்கு பிரதமர் தெரேசா மே உத்தரவிட்டிருந்தார். அதிபர் டிரம்ப்பும் அதுபோன்ற நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆக அண்மையத் தகவல் கூறியது.

