வாஷிங்டன்: துப்பாக்கி கலாசாரத் துக்கு எதிராக அமெரிக்கா முழு வதும் நேற்று முன்தினம் பல்லா யிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தி உள்ளனர். 'March For Our Lives' என்று பெயரிடப்பட்ட அப்பேரணியை மாணவர்கள் முன்னின்று நடத் தினர். துப்பாக்கி தொடர்பான சட்டங் கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் பேரணியில் பல மாக ஒலித்தது. "எங்கள் குழந்தைகள் மீது துப்பாக்கியை ஏவுபவர்களை நாங் கள் துரத்துவோம்," என்னும் பொரு ளில் அமைந்த வாசகங்கள் கொண்ட அட்டைகளை பலர் ஏந்தி இருந்தனர். பேரணியில் பங்கேற்ற பலரும் துப்பாக்கிச் சட்டங்களுக்கு எதி ரான தங்களது கருத்துகளை வாச கங்களாக எழுதி அட்டைகளை ஏந்திச் சென்றனர்.
அமெரிக்க அரசியல்வாதிகள் துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ஆயுதங்களின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று பேரணிகளில் பங்கேற்ற வர்கள் வலியுறுத்தினர். கடந்த மாதம் 14ஆம் தேதி ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன் றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட் டில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்க மக்களை சினம் கொள்ளச் செய்தது. இதற்கிடையே, தானியங்கி துப் பாக்கிகளில் இணைத்து வேக மாகச் சுடுவதற்கு தேவையான 'பம்ப் ஸ்டாக்கு'களை தடைசெய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை கூறியுள்ளது. பகுதி தானியங்கி துப்பாக்கி களை இயந்திரத் துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரி பாகம்தான் 'பம்ப் ஸ்டாக்'. ஆனால், இதுபோன்ற ஆயுதம் தொடர்பான சட்டதிட்டங்களில் இன்னும் விரிவான மாற்றங்களை யோசித்து அமல்படுத்தலாம் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
அமெரிக்காவின் பல மாநிலங் களிலும் மக்கள் பெருமளவில் திரண்டு துப்பாக்கிச் சட்டங்களைக் கடுமையாக்குமாறு முழங்கினர். துப்பாக்கிக் குண்டுகளுக்கு மாணவர்கள் அடிக்கடி இரையாவதை இனியும் சகித்துக்கொள்ள இயலாது என பேரணியில் பங்கேற்றவர்கள் முழங்கினர். படம்: ஏஎஃப்பி

