சிட்னி: பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகின் முக்கிய நகரங்களின் கட்ட டங்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் இருளில் மூழ்கும். இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார முறை கடந்த 2007ஆம் ஆண்டு முதன்முதலில் ஆஸ்திரேலி யாவில் தொடங்கப்பட்டது. இப்போது இதனை 187 நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் இரவு அந்த நாடுகளின் முக்கிய நகரச் சின்னங்கள் ஒரு மணி நேரத்திற்கு விளக்குகளை அணைத்தன.
கொலம்பிய நகரமான கேலியில் விளக்கு அணைக்கப்பட்ட நேரம் மெழுகுவத்திகளால் இவ்வாறு ஒளியூட்டி 'எர்த் அவர்' பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. படம்: ஏஎஃப்பி

