இந்திய மாணவர்களுக்கு மலேசியப் பிரதமர் உறுதி

இந்திய மாணவர்களுக்கு மலேசியப் பிரதமர் உறுதி

2 mins read
fba45751-abdc-4bb2-9330-552a1f2fb4c5
-

கோலாலம்பூர்: பொது கல்விக்கழகங்களில் இந்திய மாணவர்களின் விகிதம் ஏழு விழுக்காடு என்னும் இலக்கை எட்டுவதற்கு அரசாங்கம் வழிவகைகளைக் காணும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்து உள்ளார். பொது பல்கலைக்கழகங்கள் அல்லது மெட்ரிகு லேஷன் பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்கான இடங்களை அதிகரிப்பது எவ்வாறு என்பதை அர சாங்கம் ஆராய்ந்து வருகிறது. "விரைவிலேயே நீங்கள் (இந்தியர்கள்) ஏழு விழுக்காடு என்னும் இலக்கை எட்டுவீர்கள்," என்று நேற்று முன்தினம் 'மைநாடி' அறநிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பேசுகையில் திரு நஜிப் உறுதியளித்தார்.

அடுத்த பத்தாண்டுகளில் பொது பல்கலைக்கழகங் களில் இந்திய மாணவர்களின் ஒதுக்கீட்டை ஏழு விழுக்காட்டுக்கு உயர்த்த அரசாங்கம் திட்டம் வகுத்து உள்ளது. கல்வி, நெருக்கமான சமூக உறவு ஆகிய இரண் டும் இந்திய சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்சினை களைச் சமாளிக்க மிகவும் முக்கியமானவை என்று மாணவர்கள் மத்தியில் அவர் கூறினார். "இந்த இரு வலிமைகளையும் நீங்கள் பெற்று விட்டால் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் திறன் உங்களுக்கு வந்துவிடும்," என்றார் திரு நஜிப்.

தரமான கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றுக்கான வாய்ப்பை இந்தியர்கள் எட்ட வழிவகுக்கவும் ஒவ்வொரு தனிமனிதரும் தங்களின் அதிகபட்சத் திறனை அடைவதை உறுதி செய்யவும் வழிகாணத் தாம் விரும்புவதாக அவர் சொன்னார். வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் இந்தியர்களுக் கான சிறப்பு முதலீட்டுத் திட்டம் ஒன்றை அடுத்த மாதம் 7ஆம் தேதி அரசாங்கம் அறிவிக்கும் என்றும் இது கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் என்றும் திரு நஜிப் குறிப்பிட்டார்.

போட்டியில் வென்ற மாணவர்களுடன் பிரதமர் நஜிப். படம்: மலேசிய ஊடகம்