சிட்னி: பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பாப்புவா நியூ கினியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியில் நேற்று 6.6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகக் கூறப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கிடையே இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று காலை 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாப்புவா நியூ கினி, இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
1 mins read
-

