ரியாத்: ஏமனில் உள்ள கிளர்ச்சி யாளர்கள் சவூதி அரேபியாவை நோக்கி வீசிய 7 ஏவுகணை களை சவூதி அரேபிய விமானப் படை இடைமறித்து அழித்ததாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள் ளது. மூன்று ஏவுகணைகள் சவூதி தலைநகர் ரியாத்தை குறிவைத்து வீசப்பட்டதாகக் கூறப்பட்டது. இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் துகள்கள், அங்குள்ள குடியிருப்புப் பகுதி களில் விழுந்ததில் எகிப்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த தாகவும் இருவர் காயம் அடைந்த தாகவும் அதிகாரிகள் கூறினர். ஏமனில் நீடிக்கும் உள் நாட்டுச் சண்டையில் சவூதி தலைமை யிலான கூட்டணிப் படை தலையிட்டு மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில் கிளர்ச்சியாளர் கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ரியாத் அனைத்துலக விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களைத் தாக்க எண்ணி யிருப்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏமனிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணைகளை சவூதி அரேபிய விமானப்படை இடைமறித்து அழித்ததைத் தொடர்ந்து சேதம் அடைந்த ஏவுகணைகளின் துகள்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்தன. அதனால் வீட்டுக்கூரையில் ஏற்பட்ட பெரிய துவாரத்தை ஒருவர் பிரமிப்புடன் பார்க்கிறார். படம்: ஏஎஃப்பி

