வாஷிங்டன்: திரு டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரா வதற்கு முன்பு அவருடன் பாலியல் உறவு வைத்திருந்த தாகக் கூறி பரபரப்பை ஏற்படுத் திய ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டிரம்ப் புடனான அந்த உறவு குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
2006 ஆம் ஆண்டு டிரம்ப்புடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகக் கூறிய ஸ்ட்ரோமி டேனியல்ஸ் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதைப் பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகக் கூறி னார். 2011ஆம் ஆண்டு லாஸ் வேகஸில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் யாரென்று தெரியாத ஒரு நபர் தன்னிடம் வந்து இதை கூறிச் சென்றதாக அவர் சிபிஎஸ் செய்தி நிறு வனத்திடம் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராகும்போது இது குறித்து வேளியே பேசுவதில்லை என்ற ஒப்பந்தத்தில் தான் கையெழுத்துப் போட்டதாகவும் நடிகை ஸ்ட்ரோமி சொன்னார். திரு டிரம்ப் மீது அந்த நடிகை கூறும் குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை மறுத் துள்ளது.
திரு டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு பத்து ஆண்டு களுக்கு முன்பு அவருடன் பாலியல் உறவு வைத்திருந்த தாகக் கூறிய ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் தான் மிரட்டலுக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

